உத்தரப்பிரதேஷத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யாநாத் பதவியேற்பு

நடந்து முடிந்த உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

உத்தரப்பிரதேஷத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் இன்று 25-03-2022, நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆனந்திபென் படேல், யோகி ஆதித்யநாத்திற்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்கள், பாஜக கட்சி தலைவர் ஜே.பி நட்டா,முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பாராட்டிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.

உத்தரப்பிரதேஷத்தில் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன