Today Current Affairs in Tamil December 20, 2021
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அதிகபட்ச வருமான உச்சவரம்பை ரூபாய் 72,000ல் இருந்து 12,0000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளில் வகுப்பறைகள் அமைக்க 150 கோடி ஒதுக்கீடு
- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, “ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1138 பள்ளிகளில் பயிலும் 83,259 மாணாக்கரின் கல்வி நலனை உறுதி செய்யும் பொருட்டும், மாணாக்கரின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையிலும், 150 பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும்” என்று அறிவித்திருந்தார்
- அதன்படி, ரூபாய் நூறு கோடி மதிப்பீட்டில் 29 மாவட்டங்களில் உள்ள 150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு 480 புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 15 ஆய்வகக் கட்டடங்களை கட்டித் தருவதற்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்:104, ஆ.தி.(ம)ப.ந. (ஆதிந2(1)) துறை, நாள் : 07.12.2021 – ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.