BWF இறகுப்பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கம்
BWF இறகுப்பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.
BWF இறகுப்பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்னுயிர் காப்போம் மருத்துவ திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
சாலை விபத்துகளில் சிக்குபவர்களை துரிதமாக காப்பாற்றும் நோக்கத்ததுடன் இன்னுயிர் காப்போம் மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவர்கிளின் முதல் 48 மணிநேர அவசர மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும்.
இந்த திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.