10, 12 துணை தேர்வுக்கு இலவச பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை
நடந்து முடிந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வி துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தேர்வில் தோல்வியடைந்த/பங்கேற்காத பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பாக துணைத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுக்காக வருகின்ற ஜூன் 19 முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பாடம் வாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகளை நடத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மாவட்டம் தோறும் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புககளை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.