நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 5 April 2023

ஜல் ஜீவன் இயக்கத்தில் 60% இலக்குகள் நிறைவு

ஜல் ஜீவன் இயக்கம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய நலத் திட்டங்களில் ஒன்றாகும்.

ஜல் ஜீவன்திட்டத்தின் நோக்கம், இந்திய கிராமங்களில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு சேர்ப்பதே ஆகும்.

இந்தியாவில் இதுவரை 1.55 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் (மொத்த கிராமங்களின் எண்ணிக்கையில் 25%) ‘ஹர் கர் ஜல்’ என்று பதிவாகியுள்ளன. அதாவது, இந்தக் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தங்கள் வீட்டிலேயே குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.

2023 ஏப்ரல் 4-ம் தேதியன்று ‘ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர்’ என்ற பயணத்தில் நாடு மற்றொரு மைல்கல்லைக் கடந்துள்ளது. நாட்டில் 11.66 கோடிக்கும் அதிகமான (60%) கிராமப்புற குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

குஜராத், தெலுங்கானா, கோவா, ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள், டாமன்-டையூ & தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்கள் 100% இணைப்பைப் பெற்றுள்ளன.

பிரதமர் மோடியுடன் பூட்டான் அரசர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் பூட்டான் அரசர் சந்திப்பு

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பூட்டான் அரசர் ஜிஜிமே க்ஹெசர் நமஃயேல் வாங்ச்சுக் ஐ (Jigme Khesar Namgyel Wangchuck) சந்தித்தார்,

இந்த சந்திப்பு இந்தியா பூட்டான் நல்லுறவை வலுப்படுத்துவதற்காக நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *