சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுரை
நம் அன்றாட வாழ்வில் நம்முடைய சுற்றுச்சூழல் எண்ணற்றற்ற வகைகளில் மாசடைந்து கொண்டிருக்கிறது. நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் தெரிந்திருப்பது அவசியமாகும். சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய கட்டுரையை இத்தொகுப்பில் காணலாம்.
Environment Pollution Essay in Tamil – சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய கட்டுரை
முன்னுரை
சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது உலகின் பிரதான மூலக்கூர்களாகிய காற்று, நீர், நிலம் ஆகியவை மாசடைவதை குறிப்பதாகும். சுற்றுச்சூழல் மாசுபடுவதினால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதோடு, உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளுக்கும் பாதிப்படைகின்றன, குறிப்பாக மனிதர்களுக்கும் பெருமளவில் பாதிப்படைகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது
சுற்றுசூழலுக்கு மனிதனால் பல வடிவங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டில் , நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, மண் மாசுபாடு, ஒலி மாசுபாடு முதலியனவை அடங்கும். இவை ஒவ்வொன்றையும் விரிவாக காணலாம்.
நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு என்பது நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை, ஆகியவைகளில் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாகும். மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களால் தான் நீர் மாசுபாடு பெருமளவில் ஏற்படுகிறது. குப்பைகள், தொழிற்க் கழிவுகள், நெகிழிகள், ரசாயனக் கழிவுகள் முதலியனவை ஆறு, குளம் ஆகிவற்றில் கலக்கப்படுவதால் அதில் இருக்கும் நீர் பெரிதும் மாசடைகிறது.
நீர் மாசுபட்டால் ஏற்படும் பாதிப்புகள்
மாசடைந்த நீரை பருகுவதால் வயிற்றுக் கோளாறுகள், வாந்தி, மயக்கம், காலரா போன்ற நோய்கள் ஏற்படலாம். நீர்நிலையைகளை நம்பி இருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளும் பாதிப்படைகின்றன.
காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு உலகில் நிலவிக் கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகும். வாகனங்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள், குப்பைகளை எரியூட்டுவது முதலிய செயல்கள் எண்ணற்ற நச்சுப் புகைகளை வெளியேற்றுகிறது. இத்தகைய நச்சுப்புகைகள் சுற்றுபுறத்தில் உள்ள காற்றை மாசுபடுத்திகிறது.
காற்று மாசுபட்டால் ஏற்படும் பாதிப்புகள்
நச்சு கலந்த காற்றை சுவாசிப்பதினால் சுவாச கோளாறுகள், புற்றுநோய் ஆகிய உயிர் கொல்லி நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புவி வெப்பமயமாதலுக்கும் காற்று மாசுபாடு முக்கிய காரணியாகும்.
மண் மாசுபாடு
மண் மாசுபாடு, நிலத்தில் திடக்கழிவுகளை கொட்டுவது, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை போடுவது, மக்காத கழிவுகளாகிய நெகிழி ஆகியவற்றை கொட்டுவது முதலிய காரணங்களால் ஏற்படுகிறது.
மண் மாசுபட்டால் ஏற்படும் பாதிப்புகள்
மண் மாசுபட்டால் மண்ணின் தரம் குறைவதோடு நிலத்தடி நீரும் மாசடைகிறது.
உலக சுற்றுச்சுழல் தினம்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் நாள், உலக சுற்றுச்சுழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
முடிவுரை
சுற்றுச்சூழல் மாசுபாடு உலகளவில் தலையாய பிரச்சனையாக மாறிக்கொண்டு வருகிறது. இதனால் பூமி வாழத்தகுதியற்ற இடமாக மாறும் அபாயம் ஏற்பட்டடுள்ளது. ஆதலால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுத்து உலகை காப்பாற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.