நீட் இளங்கலை (NEET UG) 2023 தேர்வு நாள், பாடத்திட்டம், முடிவுகள்
NEET UG 2023: நீட் தேர்வு என்பது இளங்கலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாகும். MBBS, BDS முதலிய இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்புவோர் நீட் இல் தேர்ச்சி பெற வேண்டும்.
நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் மருத்துவம் பயில்வதற்கான மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.
நீட் 2023 தேர்வு அட்டவணை
தேர்வின் பெயர் | நீட் இளங்கலை (NEET UG) 2023 |
தேர்வு நடத்தும் முகமை | தேசிய தேர்வு முகமை (NTA) |
NEET விரிவாக்கம் | National Eligibility cum Entrance Test |
NEET UG 2023 விண்ணப்பிக்க கடைசி நாள் | 6 April 2023 |
NEET UG 2023 தேர்வு நாள் | 7 May 2023 |
NEET UG 2023 பாடத்திட்டம்
நீட் இளங்கலை நுழைவு தேர்வில், 11 மற்றும் 12 வகுப்புகளின் இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் (Physics, Chemistry, Botany & Zoology) ஆகிய படங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் கேள்விகளுக்கு விடை அளிக்கவேண்டும்.