Moral Stories in Tamil | நீதிக்கதைகள்

முட்டாள் மரம்வெட்டி

ஓரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், ராஜு என்ற மரம் வெட்டும் தொழில் செய்யும் ஒருவர் தன குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் கடின உழைப்பாளி. கிராமத்தார் மத்தியில் ராஜுவிற்கு நல்ல பெயர் இருந்தது.

காட்டில் ஒரு நாள் மரம் வெட்டி கொண்டிருக்கும் பொது, ராஜுக்கு ஒரு அதிசிய கோடரி கிடைத்தது. அந்த கோடரியை உபயோகித்து பார்க்க எண்ணினான் ராஜு. அருகில் இருக்கும் மரத்தை கோடரியை கொண்டு ஒரு வெட்டு வெட்டினான், அடுத்த நொடியே மரம் துண்டானது. இதனை கண்ட ராஜு மிடவும் வியப்படைந்தான். அதிசிய கோடரியால் தனது வேலை எளிதானத்தை உணர்ந்து மகிழ்ச்சி அடைத்தான்.

அதிசிய கோடரியை பயன்படுத்தி குறைந்த நேரத்தில் அதிக மரத்தை வெட்டி விற்று அதிக பணம் ஈட்டினான். இவ்வாறே நாட்கள் கடந்தன. நாட்கள் செல்ல செல்ல மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது, விலங்குகளும் பறவைகளும் இடம் பெயரை தொடங்கின. ஒரு கட்டத்தில் காட்டில் அணைத்து மரங்களும் வெட்டபட்டுவிட்டது. காடு காணாமல் போனது.

இந்த கதையின் நீதி:

வல்லமையானவர்கள் (வலிமையானவர்கள்) மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்

தந்திர நரி

ஓரு காலத்தில், அடர்ந்த காடுகளுக்கிடையே பேராசை பிடித்த நரியொன்று வாழ்ந்து வந்தது. எந்த வேலையும் செய்யாமல் மிகவும் எளிதாக குறுக்கு வழியில் உணவு தேடிக்கொள்வதே அந்த நரியின் கொள்கை. தன் உணவுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அந்த நரி .

ஒரு நாள் நரிக்கு மிகவும் பசி எடுத்து. உணவுக்காக காடெங்கும் தேடி அலைந்தது. அப்போது கொத்துக்கொத்தாக காய்த்திருக்கும் ஆப்பிள் மரம் ஒன்று அதன் கண்ணில் பட்டது. எப்படியாவது அந்த ஆப்பிள் பழங்களை பறித்து சாப்பிட்டு தனது பசியை போக்கி கொள்ள வேண்டுமென்று நரி எண்ணியது. உடனே ஆப்பிள் மரத்தின் மீது வேகவேகமாக ஏறியது நரி. மரத்தின் உச்சியை அடைந்ததும், நரியின் பாரம் தாங்கமுடியாமல் மரத்தின் கிளைகள் கீழே சாயத்தொடங்கியது. இந்த நிலையில், மரத்தின் இருக்கும் பழத்தை பறித்தால், கீழே விழுந்து விடுவோம் என்று நரி எண்ணியது. அப்போது என்னசெய்வது என்று நரி தந்திரமாக எண்ணியது.

அப்போது மரத்தின் மீது இருந்துகொண்டே ஆப்பிள் மரத்தை மிகவும் புகழ்ந்து பேசத்தொடங்கியது, நரி. இதனை அந்த வழியாக வந்த நாரை கூட்டம் ஒன்று நரியின் பேச்சை நின்று கவனித்தது.

ஆகா! இது தான் சந்தர்ப்பமென நினைத்த பேராசைமிக்க நரி, நாரை கூட்டத்திடம், ஆப்பிள் மரத்தின் புகழை மிகவும் சுவையுற எடுத்துரைக்க தொடங்கியது. மேலும் ஆப்பிள் பழங்களை தன்னிடம் பறித்து கொடுத்தால் உங்களுக்கும் பகிர்ந்தளிப்பேன் என்று நாரைகளிடம் உறுதி கூறியது அந்த தந்திர நரி. இதனை நம்பிய நாரைகளும், மரத்தில் தொங்கிய அணைத்து ஆப்பிள் பழங்களையும் பறித்து நரியிடம் கொடுத்தது.

நாரைகள் பறித்து கொடுத்த அணைத்து ஆப்பிள் பழங்களையும் ஒன்று விடாமல் தின்றது நரி. இதனை சற்றும் எதிர்பாக்காத நாரை கூட்டம் பெருத்த ஏமாற்றம் அடைந்தது. மிகுந்த வருத்தத்துடன், இனிமேல் பேராசை பிடித்தவர்களை நம்பக்கூடாது என்ற உறுதியேற்புடன் நாரைகள் அந்த இடத்தை விட்டு சென்றது.

இந்த கதையின் நீதி:

எப்பொழுதும் பேராசை கொள்ள கூடாது. பிறர்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் பிறர்க்கு நம்மீது உள்ள நம்பிக்கை போய் விடும்.

நல்ல பேச்சு நன்மை தரும்

முன்னொரு காலத்தில் காசி நாட்டைப் பிரமதத்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அறிவு நிறைந்த போதிசத்துவர் அங்கே அமைச்சராக இருந்தார்.

அந்த அரசனினிடம் விலை மதிக்க முடியாத பட்டத்து யானை ஒன்று இருந்தது. அதன் வலிமைக்கு எந்த யானையும் ஈடாகாது. அதன் மீது அமர்ந்து உலா வருவதை அரசன் பெருமையாக நினைத்தான்.

அந்த யானை எப்பொழுதும் அமைதியாக இருந்தது. குழந்தைகளும் அதன் மீது ஏறி விளையாடுவார்கள்.

யானை இருந்த இடத்துக்கு நள்ளிரவில் திருடர்கள் சிலர் வந்தார்கள்.

‘இந்த இடம் பாதுகாப்பாக உள்ளது. நாம் நள்ளிரவில் இங்கே சந்தித்து பேசுவோம்’ என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

அதன்படியே அவர்கள் நாள்தோறும் இரவில் அங்கு வந்தார்கள். திருடியது பற்றியும் கொள்ளை அடித்தது பற்றியும் எதிர்த்தவர்களை துன்புறுத்தியது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கொடூரமான பேச்சய் கேட்டு அந்த யானை பொறுமை இழந்தது. மிகவும் மூர்க்கம் அனைத்து ஆனது. பாகனுக்கு அடங்க மறுத்தது.

அதை அடக்க முயன்ற பேகன் அங்குசதால் அதை அடித்தான்.

பயங்கரமாக பிளிறிய அது பாகனை தூக்கி எரிந்து மிதித்து கொன்றது.

இன்னொரு பேகன் அதை அடக்க முயன்றான். அவனுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது.

‘பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. புகார்களை கொன்று விட்டது’ என்ற செய்தி நகரம் முழுக்க பரவியது. மக்கள் நடுங்கினார்கள்.

‘அமைதியான யானை மூர்கமாகி விட்டதே. யார்க்கும் அடங்க மறுகிறதே. இப்பொழுது என்ன செய்வது’ என்று சிந்தித்தான் அரசன்.

அமைச்சரை அழைத்த அரசன் “நீங்கள்தான் யானையை எப்படியாவது பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்” என்றான்.

சங்கிலியால் நன்கு கட்டப்பட்டிருந்த யானையின் அருகே சென்றார் அமைச்சர். அதன் உடல் நலத்தில் எந்த
குறையும் இல்லை என்பதை அறிந்தார்.

‘அதன் உள்ளத்தை ஏதோ பாதித்து இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறது’ என்று நினைத்தார்.

அங்கிருந்த காவலனிடம் அண்மைய காலத்தில் இங்கு ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்” என்றார்.

“தொடர்ந்து பல நாட்களாகத் திருடர்கள் சிலர் இரவில் இங்கே தங்குகிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் பேசுகிறார்கள். பிறகு செண்டு விடுகிறார்கள்” என்றான் அவன்.

‘திருடர்களின் கொடிய பேச்சை நாள்தோறும் கேட்டு யானையும் கொடூரமாகி விட்டது’ என்பது அவருக்கு புரிந்தது.

அரசனிடம் வந்த அவர் ” அரசே! யானைக்கு உடல் நலக் குறைவு எதுவும் இல்லை. திருடர்கள் பேசுவதை கேட்டு கேட்டு இப்படி ஆகி விட்டது. இனிமேல் திருடர்கள் யாரும் அங்கு கூடாமல் தாய் செய்ய வேண்டும்.

கட்டப்பட்டு இருக்கும் யானையின் அருகே ஞானியர் துறவியர் அமர வேண்டும். அன்பின் பெருமை, அமைதியின் சிறப்பு, பிறர்க்கு நன்மை செய்வதால் ஏற்படும் மேன்மை பற்றி அவர்கள் பேச வேண்டும். நல்ல செய்திகளை மற்றும் யானை கேட்ட்க வேண்டும். சில நாட்களில் அது பழைய நிலைமைக்கு வந்து விடும்” என்றார்.

அவர் அறிவுரைபடியே செலயப்பட்டான் அரசன்.

அந்த யானையின் அருகில் பெரியவர்கள் சிலர் அமர்ந்தார்கள்.

அதன் காதில் கேட்கும்படி ‘எல்லேரிடமும் அன்பாகவும் இனிமையாகவும் நடந்து கொள்ள வேண்டும். யாருக்கும் துன்பம் தரக்கூடாது. நல்லவர்கள் தாங்கள் துன்பம் அடைந்தாலும் பிறருக்கு நன்மையே செய்வார்கள்’ அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்களின் பேச்சைக் கேட்டு வந்த யானையின் மூர்க்கம் தணிந்தது. பழைய நிலைக்கு வந்தது.

முன்பு போலவே குழந்தைகள் அதன் மேல் அரி விளையாடி மகிழ்தார்கள்.

இந்த கதையின் நீதி:

நல்லவற்றை பேசுவதே நமக்கும் பிறருக்கும் நன்மை தரும். தீயவற்றை பேசுவதினால், அது நமக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *