ஹிந்தி எழுத படிக்க உங்களுக்கு ஆர்வமா? உங்களுக்காகவே இந்த பதிவு. இப்பதிவில் நீங்கள் மிகவும் எளிதாக ஹிந்தி எழுத்துக்களை தமிழில் அறியலாம்.
ஹிந்தி எழுத்துக்கள் தேவநாகரி எழுத்தமைப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுளது. ஹிந்தி மொழியில் உயிர் எழுத்துக்கள் ‘ஸ்வர்’ எழுத்துக்கள் என்று அழைக்கப்படும். அதே போல் மெய் எழுத்துக்கள் ‘வ்யஞ்ஜன்’ (vyanjan) எழுத்துக்கள் என்று அழைக்கப்படும்.
முதலில் உயிரெழுத்துக்களாகிய ‘ஸ்வர்’ எழுத்துக்களை பார்ப்போம்.
Swar Hindi Letters in Tamil
ஹிந்தியில் अ முதல் औ வரை மொத்தம் 11 ஸ்வர் எழுத்துக்கள் உள்ளது. அவற்றை கீழே காணலாம். இருப்பினும் अं, अः (am, ah) என்ற இரண்டு எழுத்துக்கள் Anuswar, Visarg என்றழைக்கப்படும், மேலும் இந்த இரண்டு எழுத்துக்களும் தமிழில் ‘ஃ’ இருப்பது போல எந்த சொற்களிலும் முதலெழுத்தாக அமையாது.
Hindi vowel letters
Hindi Vowel Letters in Tamil
Pronunciation in tamil
अ
அ
அம்மா
आ
ஆ
ஆடு
इ
இ
இலை
ई
ஈ
ஈசல்
उ
உ
உரல்
ऊ
ஊ
ஊசி
ऋ
ரி
ரிஷி
ए
ஏ
ஏணி
ऐ
ஐ
ஐயம்
ओ
ஓ
ஓடம்
औ
ஔ
ஔவையார்
अं
அம்
அம்பு
अः
அஹ
நமஹ
Vyanjan (Consonants) Letters in Tamil
ஹிந்தி மொழியில் மெய் எழுத்துக்கள் ‘வ்யஞ்ஜன்’ (vyanjan) என்று அழைக்கப்படுகிறது. மொத்தமாக 33 வ்யஞ்ஜன் எழுத்துக்கள் ஹிந்தியில் உள்ளது. அவற்றை நீங்கள் இப்போது மிகவும் எளிதாக கற்கலாம். ‘Vyanjan’ எழுத்துக்களை உச்சரிக்கும் முறை தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.