அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதிப்பு
2019 ஆம் ஆண்டு அமேசான் (Amazon) நிறுவனம் – பியூட்டர் இந்தியா (Future India) நிறுவனத்தோடு வியாபார ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் அமேசான் நிறுவனம் ஒருசில வியாபார செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதாக கூறி இந்திய போட்டி ஆணையம் (Competition commission of India) அந்த ஒப்பந்தத்தை தற்காலிக ரத்து செய்தது.
மேலும் இது தொடர்பாக அமேசான் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், அமேசானுக்கும் பியூட்டர் நிறுவனத்துக்கும் இடையிலான தொழில் உறவில் முறிவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.