பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
2020 ஆம் ஆண்டு சுதந்திரதின உரையின் போது பிரதமர் மோடி, நாட்டில் இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து காப்பது முக்கியம், அதற்கு பெண்களுக்கு சரியான வயதில் திருமணம் நடப்பது அவசியம் என்று கூறினார்.
அதன்படி ஜெயா ஜைட்லீ தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, பெண்ணின் திருமணவயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.