நாட்டிலேயே முதன்முறையாக ‘டாடா பவர்’ குழுமம் நிலத்திற்கு அடியில் துணைமின் நிலையம் அமைப்பு
மின் உற்பத்தி நிறுவனமான ‘டாடா பவர்’ நாட்டிலேயே முதன்முறையாக பூமிக்கடியில் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றது.
அதன்படி முதற்கட்டமாக டெல்லியில் நிலத்திற்கடியில் துணைமின் நிலையத்தை நிறுவியது.
நிலத்திற்கடியில் துணைமின்நிலையங்கள் அமைப்பதினால் நகர்ப்புற பகுதிகளில் மின்நிலையங்கள் அமைப்பதிற்கான இடப்பற்றாக்குறை குறைகின்றது.
மேலும் சாலைகள், பூங்காக்கள் முதலியன இடங்களின் நிலத்திற்கடியிலும் துணைமின்நிலையத்தை அமைக்கலாம்.
ஒர்டான்ஸ் பேக்டரி திருச்சிராப்பள்ளி ‘NSG’ க்கு 100 ‘Trichy carbines’ துப்பாக்கிகளை விநியோகிப்பதற்கான ‘ஆர்டர்’ யை பெற்றது.
துப்பாக்கி தொழிற்சாலையான ஒர்டான்ஸ் பேக்டரி திருச்சிராப்பள்ளி (Ordance Factory Tiruchirappalli) சமீபத்தில் ‘NSG’ க்கு 100 ‘Trichy carbines’ துப்பாக்கிகளை விநியோகிப்பதற்கான ‘ஆர்டர்’ யை பெற்றது.
3.17 கிலோ எடைக்கொண்ட ‘Trichy carbines – ‘Trica’ துப்பாக்கிகள் ‘assault’ துப்பாக்கிகளை விட எடைகுறைவானது மற்றும் கட்சிதமானது.