நடப்பு நிகழ்வுகள்

ஜூன் 7 2022 நடப்பு நிகழ்வுகள்

உத்திரமேரூர் – புக்கத்துறை இடையே 4 வழிச்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் – புக்கத்துறை இடையே சுமார் 7.2 கி. மீ தூரத்திற்கு 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் குறைக்கும் விதமாக, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 54.35 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அமைகிறது.

மார்ச் 26, 2022 நடப்பு நிகழ்வுகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணி காலியிடங்களுக்காக, வழக்கறிஞர்கள் மாலா மற்றும் சௌந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்த இரு புதிய கூடுதல் நீதிபதிகளும் 2022 மார்ச் 28ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பதவியேற்று கொள்வர். இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் இருவருக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி …

மார்ச் 26, 2022 நடப்பு நிகழ்வுகள் Read More »

Daily Current Affairs in Tamil January 10, 2022

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 10, 2022 இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு விமானம்தாங்கி கப்பல் நாட்டிலேயே முதற்முதலில் முழுவதும் உள்நாட்டிலேயே விமானந்தாங்கி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. IAC விக்ராந்த் என பெயரிடப்பட்ட அக்கப்பல், சுமார் 40000 டன் எடையிலும் 23000 கோடி செலவிலும் மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளது. IAC விக்ராந்த் கப்பல் 262 மீட்டர் நீளமும்,.62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது.

Daily Current Affairs in Tamil January 8, 2022

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8. 2022 மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைப்பு கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு முகாம்கள் ஒத்திவைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Daily Current Affairs in Tamil January 7, 2022

இந்த ஆண்டில் சார்க மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது. சார்க் மாநாடு கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்றது. இந்தியா, பாக்கிஸ்தான் உட்பட மொத்தம் 8 உறுப்பு நாடுகள் அதில் பங்கேற்றது. 2016 ஆண்டில் பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை உரி தாக்குதல் காரணித்தினால் இந்தியா உட்பட அணைத்து சார்க் உறுப்பு நாடுகளும் புறக்கணித்தது. இதனிடையே 2022 ஆண்டில் சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான பாகிஸ்தானின் புதிய அழைப்பை …

Daily Current Affairs in Tamil January 7, 2022 Read More »

Daily Current Affairs in Tamil January 2022

ஜனவரி 5ல் முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. ஒமைக்ரன் பரவல் காரணமாக கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும். இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் திட்டம் பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.  இதற்காக, முதற்கட்டமாக பிலிப்பைன்ஸ் அரசு 412 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Daily Current Affairs in Tamil December 27, 2021

33 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கடந்த டிசம்பர் 25, 2021 இல் பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி 2022 முதல் கொரோன தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். பிரதமரின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் 18 வயதுக்குட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு வருகின்ற ஜனவரி 3, 2021 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சிறுவர்களின் பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

Today Current Affairs in Tamil December 20, 2021

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அதிகபட்ச வருமான உச்சவரம்பை ரூபாய் 72,000ல் இருந்து 12,0000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளில் வகுப்பறைகள் அமைக்க 150 கோடி ஒதுக்கீடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் …

Today Current Affairs in Tamil December 20, 2021 Read More »

Today Current Affairs in Tamil December 19, 2021

BWF இறகுப்பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கம் BWF இறகுப்பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி பதக்கம் வென்று சாதனை. BWF இறகுப்பந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இன்னுயிர் காப்போம் மருத்துவ திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை துரிதமாக …

Today Current Affairs in Tamil December 19, 2021 Read More »

Daily Current Affairs in Tamil December 18, 2021

கங்கா விரைவு சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கங்கா விரைவுசாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 600 கிமீ தூரத்திற்கு கங்கா விரைவு சாலை அமையவுள்ளது. கங்கா விரைவு சாலையானது உத்தரப்பிரதேஷத்தின் மீரட் மாவட்டத்தின் பீஜவுளி கிராமத்தில் தொடங்கி ப்ரயக்ராஜிலுள்ள ஜூடப்பூர் தண்டு என்ற இடத்தில் நிறைவடைகிறது.