குஜராத்: இந்திய எல்லை பாதுகாப்பு படை (BSF) வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 9ஆம் தேதி சுமார் 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்கள் மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் குஜராத்தின் ஹராமி நல்லா பகுதியில் ஊடுருவி இருப்பது கண்டறியப்பட்டது. அன்று இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்கள் இந்தியா எல்லை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் அந்த அறிக்கையில், ஊடுருவிய பாகிஸ்தானியர்களை பிடிக்கும் பணி இந்தியா விமான படை உதவியுடன் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளனர்.