கூடுதலாக 2,500 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சேர்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்களை சேர்த்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தம் 7382 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24, 2022 அன்று நடைபெற்றது. இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், மேலும்,2500 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி சேர்த்துள்ளது தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வினை சுமார் 15 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில் குரூப் 4 2022 ஆண்டுக்கான மொத்த பணியிடங்கள் 9822 ஆக அதிகரித்துள்ளது.