சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணி காலியிடங்களுக்காக, வழக்கறிஞர்கள் மாலா மற்றும் சௌந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இந்த இரு புதிய கூடுதல் நீதிபதிகளும் 2022 மார்ச் 28ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பதவியேற்று கொள்வர். இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் இருவருக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணி காலியிடங்களுக்காக, வழக்கறிஞர்கள் மாலா மற்றும் சௌந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இந்த இரு புதிய கூடுதல் நீதிபதிகளும் 2022 மார்ச் 28ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பதவியேற்று கொள்வர். . இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் இருவருக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக இரண்டு நீதிபதிகள் சேர்க்கப்படவுள்ளதால், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக உயரும்.